tamilnadu

img

9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முடிவு

உலக புகழ் பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்யில், 52,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது உலக முழுவதும் கோவிட்-19 தாக்கத்தின், உலகின் பெருநிறுவனங்கள் பெரும் சரிவை கண்டுள்ளது.  இந்த சூழலில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தனது தனது நிறுவனத்தில் பணிபுரியும் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் அதன் ஆண்டு செலவில் 1.3 பில்லியன் பவுண்டுகளை சேமிக்க முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அதன் விண்வெளி வணிகத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்யவும், இந்த பணி நீக்கமானது,  பெரும்பாலும் சிவில் விண்வெளியில் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

;